கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வரும் நவ.18-ம் தேதி எம்பிஏ, எம்சிஏ துணைக் கலந்தாய்வு நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகளில் நடத்தப்பட்டு வரும், எம்பிஏ, எம்சிஏ படிப்புகளின் முதலாமாண்டில் காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை, 2020-21 ஆம் கல்வியாண்டில் நிரப்புவதற்கான இணையவழிக் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்றது.
எம்சிஏ படிப்புக்குக் கடந்த நவ.6 மற்றும் 7-ம் தேதிகளிலும், எம்பிஏ படிப்புக்கு நவ.10-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரையிலும் கலந்தாய்வு நடைபெற்றது. அதில் நிரப்பப்படாத இடங்களை நிரப்புவதற்கான துணைக் கலந்தாய்வு வரும் 18-ம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்துத் தமிழ்நாடு எம்பிஏ, எம்சிஏ மாணவர் சேர்க்கைச் செயலரும், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வருமான பி.தாமரை கூறியதாவது:
''எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான துணைக் கலந்தாய்வு வரும் நவ.18-ம் தேதி கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறுகிறது. முதல்கட்டக் கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்கள், விண்ணப்பித்துக் கலந்துகொள்ள முடியாமல் தவறவிட்டவர்கள், டான்செட் தேர்வெழுதி விண்ணப்பிக்கத் தவறியவர்கள் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இக்கலந்தாய்வு நடைபெறுகிறது.
எனவே, மாணவர்கள் உரிய சான்றிதழ்கள், கலந்தாய்வுக் கட்டணத்துடன் 18-ம் தேதி காலை 10 மணிக்கு முன்பு அரசு தொழில்நுட்பக் கல்லூரிக்கு நேரில் வர வேண்டும். தரவரிசை மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே துணைக் கலந்தாய்வு நடைபெறும். எஸ்சி பிரிவில் காலியாக உள்ள இடங்களை எஸ்சி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு நவ.19-ம் தேதி கலந்தாய்வு நடைபெறும்''.
இவ்வாறு தாமரை கூறினார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
10 days ago
வெற்றிக் கொடி
10 days ago
வெற்றிக் கொடி
10 days ago
வெற்றிக் கொடி
17 days ago
வெற்றிக் கொடி
17 days ago
வெற்றிக் கொடி
17 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
1 month ago