மருத்துவக் கலந்தாய்வுக்கு 32,300 பேர் விண்ணப்பித்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
மேற்குறிப்பிட்ட படிப்புகளில் சேர மாணவர்கள் நவ.3-ம் தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனர். இந்தக் கலந்தாய்வு குறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளதாவது:
''இதுவரை அரசுக் கல்லூரிகளில் சேர அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் 21,063 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 19,054 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். 12,312 மாணவர்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து இணையதளத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
» கரோனாவுக்குப் பிறகான வேலைவாய்ப்பு, தொழில் போக்கு குறித்த ஆன்லைன் கருத்தரங்கம்: ஏஐசிடிஇ நடத்துகிறது
» கல்லூரிகள் விடுதி அறைக்கு ஒரு மாணவர்தான்: யுஜிசி கட்டுப்பாட்டால் உயர் கல்வித்துறை குழப்பம்
மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர 11,237 மாணவர்கள் முன் பதிவு செய்துள்ளனர். நவ.12-ம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நவ.16-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும்''.
இவ்வாறு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
28 days ago
வெற்றிக் கொடி
28 days ago
வெற்றிக் கொடி
28 days ago
வெற்றிக் கொடி
28 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago