தடுப்பூசி பொருளாதாரம் குறித்த படிப்புகளை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம், ஜெய்ப்பூர் ஐஐஎச்எம்ஆர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்குகிறது. இந்தப் படிப்பு முழுக்க முழுக்க ஆன்லைனில் நடைபெற உள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் எல்லோரின் கேள்வியும் நோய்க்கான தடுப்பூசி எப்போது கண்டுபிடிக்கப்படும் என்பதாகவே உள்ளது.
இதற்கிடையே கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தடுப்பூசிப் பயன்பாட்டை அதிகரிக்கக் கொள்கை வகுப்பாளர்களுக்கும் திட்ட மேலாளர்களுக்கும் கற்பிக்கும் விதமாக இரண்டு ஆன்லைன் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இதற்காக இதுவரை 400 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில் இருந்து நோய்த் தடுப்பு மற்றும் தடுப்பூசி விநியோகம் சார்ந்த துறைகளில் இருந்து 230 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இந்தியா, மியான்மர், நேபாளம், சோமாலியா ஆகிய நாடுகளில் இருந்து விண்ணப்பித்தூள்ளனர்.
» நீட் பயிற்சி வகுப்பு எப்போது?- 30 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் கவலை
» சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; ஜனவரியில் நுழைவுத் தேர்வு: அறிவிப்பு வெளியீடு
இது தொடர்பாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பர்க் பொது சுகாதாரத் துறைப் பேராசிரியர் டேவிட் பிஷாய் கூறும்போது, ''தடுப்பூசி பொருளாதாரம், இந்தியப் பொது சுகாதாரத்தின் முக்கியமான மற்றும் அத்தியாவசியமான அங்கமாகும். கோவிட்-19 சூழல், வழக்கமான தடுப்பூசி நடைமுறைகளைப் பாதித்துள்ளது.
அதனாலேயே இந்த ஆன்லைன் படிப்பு கோவிட்-19 தடுப்பூசிகள் சோதனையில் இருக்கும். குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், அதிகபட்சமான மனிதர்களுக்குத் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்கிறது'' என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago