சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

இளங்கலை மற்றும் முதுகலை சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசத்தை நீட்டித்து அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டு சட்டப் படிப்புகள் (எல்எல்.பி), 5 ஆண்டு சட்டப் படிப்புகள் (பிஏ எல்எல்.பி), 2 ஆண்டு சட்ட மேற்படிப்புகள் (எல்எல்.எம்), உள்ளிட்ட படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் படிப்புகளில் நடப்புக் கல்வி ஆண்டில் சேர விண்ணப்ப விநியோகம் நடைபெற்றது. இளநிலைப் படிப்புக்கு அக்டோபர் 28-ம் தேதி வரையும், முதுநிலைப் படிப்புக்கு நவம்பர் 4-ம் தேதி வரையும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 3 ஆண்டு சட்டப் படிப்புகள், 2 ஆண்டு சட்ட மேற்படிப்புகளுக்கு நவ.18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் கால அவகாசத்தை நீட்டித்து அறிவித்துள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: www.tndalu.ac.in

தமிழகம் முழுவதும் சென்னை, செங்கல்பட்டு, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

29 days ago

மேலும்