உத்தராகண்டில் 84 பள்ளிகள் மூடல்: 80 ஆசிரியர்களுக்குத் தொற்றால் நடவடிக்கை

By ஏஎன்ஐ

உத்தராகண்டில் 80 ஆசிரியர்களுக்குக் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்குள்ள 84 பள்ளிகள் 5 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக உத்தராகண்டில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த 2-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன. 4 நாட்களாகப் பள்ளிகள் செயல்பட்ட நிலையில் பாரி மாவட்டத்தில் உள்ள கிர்சு, பாரி, காட், பபோ மற்றும் கல்ஜிகால் பகுதிகளில் உள்ள 80 பள்ளி ஆசிரியர்களுக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில், அங்குள்ள 84 பள்ளிகள் 5 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநில சுகாதாரத் துறைச் செயலாளர் அமித் நெகி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ''உத்தராகண்டின் 13 மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. கரோனா பரவுவதைத் தடுக்க நிலையான பாதுகாப்பு நடைமுறைகளைக் கல்வித்துறைக்கு வெளியிட்டுள்ளது. அவற்றை ஆசிரியர்களும் மாணவர்களும் பின்பற்ற வேண்டும்

குளிர்காலம் என்பதால் கரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பண்டிகைக் காலம் என்பதாலும் மக்கள், கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

29 days ago

மேலும்