மாணவர்கள் 10-ம் வகுப்புக்குப் பிறகு எந்தப் பாடப்பிரிவை எடுக்கலாம் என்பது குறித்து யுனிவெரைட்டி புதிய வழிகாட்டும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவின் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் மற்றும் முன்னாள் மாணவர்களின் மேலாண்மைத் தளம் யுனிவெரைட்டி. இந்நிறுவனம் சார்பில், மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுப்பதில் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. 'சப்ஜெக்ட் செலக்டர்' என்ற பெயரில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டம் மாணவர்களுக்கு ஏற்ற பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள குழப்பங்களைத் தீர்க்க உதவும். இதில் தனிப்பட்ட ஆளுமை மதிப்பீடுகள், நேரடித் தனிநபர் ஆலோசனை, எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கான அறிமுகம் ஆகியவை மேற்கொள்ளப்படும்.
இதுகுறித்து யுனிவெரைட்டி நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஜெய்தீப் குப்தா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ''10-ம் வகுப்பை முடிக்கும்போது மாணவர்கள் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தால் தங்களின் எதிர்காலம் சிறக்கும் என்ற தேவையில் நிற்கின்றனர். அப்போது சரியான வழிகாட்டுதல் அளிக்க வேண்டியது அவசியம்.
இளம் வயதில் அவர்களாகவே சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பது சிரமமான ஒன்று. பெற்றோரும் வழிகாட்டிகளும் விழிப்புடன் இருந்து நிபுணர்களின் ஆலோசனையுடன் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம். இதற்கு உதவவே சப்ஜெக்ட் செலக்டர் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம்'' என்றார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
11 days ago
வெற்றிக் கொடி
11 days ago
வெற்றிக் கொடி
11 days ago
வெற்றிக் கொடி
18 days ago
வெற்றிக் கொடி
18 days ago
வெற்றிக் கொடி
18 days ago
வெற்றிக் கொடி
25 days ago
வெற்றிக் கொடி
25 days ago
வெற்றிக் கொடி
25 days ago
வெற்றிக் கொடி
1 month ago