பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் எம்.ஃபில்., பிஎச்.டி. படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ், பல்கலைக்கழகத் துறைகள், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 110 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இக்கல்லூரிகளில் எம்.ஃபில்., பிஎச்.டி. படிப்புகள் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்குக் கடந்த செப். 27-ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் இப்படிப்புகளில் சேர நாளை (நவ. 4) முதல் www.b-u.ac.in என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) க.முருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கான எம்.ஃபில்., பிஎச்.டி. ஆராய்ச்சிப் படிப்புகளுக்குத் தகுதியுள்ள மாணவர்களிடம் இருந்து நவ. 4 முதல் 20-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்குப் பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்வையிடலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
11 days ago
வெற்றிக் கொடி
11 days ago
வெற்றிக் கொடி
11 days ago
வெற்றிக் கொடி
11 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
17 days ago
வெற்றிக் கொடி
17 days ago
வெற்றிக் கொடி
17 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago