மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. நவ.16-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா,ஆயுர்வேதா உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
இவற்றுக்கான கலந்தாய்வுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று ருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. நவ.12-ம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நவ.16-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வகுப்புகள் டிசம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கும் எனவும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
» வருங்காலத்துக்கான முன்னோட்டம்: டிஜிட்டல் கல்வி முறையை அறிமுகம் செய்த வேளாண்மைப் பல்கலைக்கழகம்
» அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை: தமிழக அரசு கடிதம்
மாணவர்கள் அரசு ஒதுக்கீடு மற்றும் தனியார் ஒதுக்கீட்டுக்கு https://tnmedicalonline.xyz/ug/mbbs_bds/index.aspx என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்
கூடுதல் விவரங்களுக்கு: http://tnmedicalselection.net/news/02112020234138.pdf
தொலைபேசி எண்கள்:
1. 044-28364822
2. 9884224648
3. 9884224649
4. 9884224745
5. 9884224746
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
11 days ago
வெற்றிக் கொடி
11 days ago
வெற்றிக் கொடி
11 days ago
வெற்றிக் கொடி
11 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
17 days ago
வெற்றிக் கொடி
17 days ago
வெற்றிக் கொடி
17 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago