தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக யுஜிசி அறிவித்துள்ளது.
இதுகுறித்துப் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலாளர் ரஜனிஷ் ஜெயின் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
''நாடு முழுவதும் 2020-21 ஆம் கல்வி ஆண்டில் செப்டம்பர் - அக்டோபர் பருவத்துக்கான திறந்த நிலை, இணைய வழி மற்றும் தொலைதூரக் கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள அக்.31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் நவ.30-ம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை தொடர்புடைய கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 15-ம் தேதிக்குள் யுஜிசிக்கு அனுப்ப வேண்டும்.''
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் தொலைதூரக் கல்வி முறையில் புதிய பட்டப்படிப்புகளை தங்களின் நிறுவனத்தில் தொடங்க கடந்த ஆண்டு யுஜிசியிடம் அனுமதி கோரியிருந்தது. இதில் 16 பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அனுமதி வழங்கியது.
தமிழகத்தில் மதுரை காமராஜர் பல்கலை., சேலத்தில் உள்ள பெரியார் பல்கலை., சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை. ஆகிய 3 மாநில அரசு பல்கலைக்கழகங்களில் 18 புதிய பாடப்பிரிவுகளுக்கு யுஜிசி அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago