யுஜிசி நெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

By செய்திப்பிரிவு

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நவம்பர் மாத நெட் தேர்வின் ஹால் டிக்கெட்டைத் தேர்வர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆண்டுதோறும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில், பல்வேறு உயர்கல்விப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசியத் தகுதித் தேர்வு (நெட்) ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாத இறுதியில் நடக்கிறது.

இதற்கிடையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், மத்திய அரசு நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவைப் பிறப்பித்தது. இதையடுத்து, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகை நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் தேர்வு தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு செப்.24-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இரண்டாவது கட்டமாக நவ.4 முதல் 13-ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில் நெட் தேர்வின் ஹால் டிக்கெட்டைத் தேர்வர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதி, கடவுச் சொல் ஆகியவற்றைப் பதிவிட்டு ஹால் டிக்கெட்டைக் காணலாம்.

ஹால்டிக்கெட்டைத் தரவிறக்கம் செய்ய: https://testservices.nic.in/examsys/DownloadAdmitCard/LoginDOB.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFV/yIzhTZHBze3wooSg9DjivRoFAJf5QC0mmebIT92RT

கூடுதல் விவரங்களுக்கு: ugcnet.nta.nic.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

26 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்