தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காவலர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். இதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 13-ம் தேதி நடக்கும் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
காவல்துறை, சிறைத் துறை, தீயணைப்புத் துறை ஆகிய துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
என்னென்ன பணியிடங்கள்?
* ஆயுதப்படை 2-ம் நிலைக் காவலர் பதவிக்கு 3,784 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஆண்கள்-685 பேர், பெண்கள்-3,099 பேர் தேர்வு செய்யப்படுவர்.
* தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் 2-ம் நிலைக் காவலர் பதவிக்கு 6,545 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஆண்கள் மட்டும் 6,545 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
* சிறைத்துறையில் 2-ம் நிலைக் காவலர் பதவிக்கு 119 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் தேர்வு செய்யப்பட உள்ள ஆண்கள் 107 பேர், பெண்கள் 12 பேர்.
* தீயணைப்புத் துறையில் தீயணைப்பாளர் பணியிடத்துக்கு 458 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். (ஆண்கள் மட்டும் 458 பேர்)
» விடாமுயற்சியால் கிடைத்த வெற்றி: 9-வது முறை முயன்று நீட் தேர்வில் வென்ற குப்பை விற்பவரின் மகன்
தேர்வு முறை:
* எழுத்துத் தேர்வு (80 மதிப்பெண்கள்) - டிசம்பர் 13-ம் தேதி மாவட்ட வாரியாகத் தேர்வு நடைபெறும்.
* உடற்கூறு அளத்தல் (தகுதித் தேர்வு)
* உடல் தகுதித்தேர்வு (தகுதித் தேர்வு)
* உடற்திறன் போட்டிகள் (15 மதிப்பெண்கள்)
* சிறப்பு மதிப்பெண்கள் (5 மதிப்பெண்கள்)
சம்பளம்:
ரூ.18,200 முதல் ரூ.52,900 வரை
கல்வித் தகுதி:
10-ம் வகுப்புத் தேர்ச்சி (தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை)
எப்படி விண்ணப்பிப்பது?
தமிழக அரசின் www.tnusrbonline.org எனும் அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இன்றே (அக்டோபர் 26) கடைசி நாள்.
கூடுதல் விவரங்களுக்கு: https://tnusrbonline.org/pdfs/CR_2020_Brochure.pdf
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago