உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுபெற தகுதியான ஆசிரியர் பட்டியலை அனுப்ப பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

By செய்திப்பிரிவு

உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுபெற தகுதியான ஆசிரியர்களின் பட்டியலை அனுப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் உயர் கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வு அனுமதிப்பது குறித்து கடந்த ஜூன் 6-ம் தேதி வெளியான அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இதுவரை ஊக்க ஊதிய உயர்வு பெறாத ஆசிரியர்களின் உயர் கல்வித் தகுதிச் சான்றிதழ்கள் மற்றும் பணிப்பதிவேட்டை ஆய்வு செய்து நவ.20-ம் தேதிக்குள் இணை இயக்குநருக்கு (தொழிற்கல்வி) அனுப்பவேண்டும். ஊதிய உயர்வு பெற ஆசிரியர்கள் இந்த ஆண்டு மார்ச் 3-ம் தேதிக்கு முன்னர் பள்ளிக் கல்வியின் முன்அனுமதி பெற்று உயர் கல்வி படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதேபோல், மொத்த பணிக்காலத்தில் 2 ஊக்க ஊதிய உயர்வுகளைப் பெற்றவர்கள் மற்றும் பணி ஓய்வுபெற்றபின் உயர்கல்வி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கண்டிப்பாக பரிந்துரைக்கக் கூடாது. மேலும், தகுதி பெற்ற எந்த ஆசிரியரின் பெயரும் விடுபடக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்