‘என்எல்சி இந்தியா’ நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’ நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் விநாடி-வினா போட்டி

By செய்திப்பிரிவு

‘என்.எல்.சி. இந்தியா’ நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து பள்ளி மாணவ - மாணவிகளுக்கான ஆன்லைன் விநாடி-வினா போட்டியை நடத்துகின்றன.

‘நேர்மையே வாழ்க்கையின் வழி’ என்பதை நோக்கமாகக் கொண்டு ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் – 2020’, அக்.27 முதல் நவ.2 வரை நாடெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு ‘விழிப்பான இந்தியா; வளமான இந்தியா’ எனும் கருப்பொருளில் ஊழல் எதிர்ப்பு குறித்தசமூக விழிப்புணர்வைப் பரப்பும் நோக்கத்துடன் ‘என்எல்சி இந்தியா’நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் விநாடி -வினா போட்டியை நடத்துகின்றன.

இப்போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளிமாணவ-மாணவிகள் கலந்துகொள்ளலாம். 5, 6, 7-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் ஜூனியர் பிரிவிலும், 8, 9, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் சீனியர் பிரிவிலும் பங்கேற்கலாம். கட்டணம் எதுவும் கிடையாது.

பதிவு செய்ய அக்.23 கடைசிநாள்

பங்கேற்க விரும்புபவர்கள் https://connect.hindutamil.in/special/nlc-quiz என்ற லிங்க்கில் பதிவு செய்ய வேண்டும். இப்போட்டியில் பங்கேற்பதற்கான விதிமுறை, தலைப்புகள் / பாடங்கள்லிங்க்கில் வழங்கப்படும். பதிவு செய்ய கடைசி நாள் அக்.23.

இந்த நிகழ்வின் நாலெட்ஜ் பார்ட்னராக எக்ஸ் குவிஸ் ஐடி இணைந்துள்ளது. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இ-சான்றிதழ் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 9003196509 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

8 hours ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்