பாரதியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்.பில்., பிஎச்.டி. படிப்புகள் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் நடத்தப்பட்டு வருகின்றன.
இப்படிப்புகளில் சேர விரும்பும் முதுநிலைப் பட்டதாரிகள், நுழைவுத் தேர்வு எழுத வேண்டியது அவசியம். அதன்படி, இத்தனை ஆண்டுகளாக நேரடியாக நடத்தப்பட்ட இத்தேர்வை, முதல்முறையாக இணைய வழியில் நடத்த பாரதியார் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்துப் பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பெ.காளிராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
''2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான எம்.பில்., பிஎச்.டி. நுழைவுத்தேர்வு அக். 27-ம் தேதி http://bucetonlineexam2020.b-u.ac.in
என்ற இணையதளம் வழியாக நடத்தப்படுகிறது. அன்று காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும்.
» நீட் தேர்வு முடிவுகளில் எந்தக் குளறுபடியும் இல்லை: தேசியத் தேர்வுகள் முகமை விளக்கம்
» நவ.1 முதல் நீட் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
தேர்வுக்கு 1057 மாணவர்களும், 1797 மாணவிகளும் என 2,854 பேர் விண்ணப்பித்துள்ளனர். நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம், தேர்வு நடத்தை உள்ளிட்ட விதிமுறைகளை நாளை (அக்.22) முதல் www.b-u.ac.in என்ற பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
மேலும் பாடம், மாணவரின் பெயர், பதிவு எண், பதிவு செய்த தொலைபேசி எண், மின்னஞ்சல் ஆகியவற்றை அதில் சரிபார்த்துக் கொள்ளலாம். அதில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பின், chemistrybu1982@gmail.com, coordinatorcet2020bu@gmail.com ஆகிய மின்னஞ்சல்களுக்கு விவரங்களை அனுப்பிச் சரிசெய்து கொள்ளலாம். 0422- 2428311, 0422-2428318 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம்.
நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, நாளை மறுநாள் (அக். 23) காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இணைய வழியில் மாதிரி நுழைவுத்தேர்வு நடைபெறும். எனவே விண்ணப்பித்த மாணவர்கள், மாதிரி நுழைவுத்தேர்வு அனுபவத்தை அறிந்துக் கொள்ள அவர்களுக்கு வழங்கப்பட்ட உள்நுழைவு ஐடி, கடவுச்சொல்லைப் பதிவு செய்து மாதிரித் தேர்வெழுத அறிவுறுத்தப்படுகின்றனர்''.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
11 days ago
வெற்றிக் கொடி
11 days ago
வெற்றிக் கொடி
11 days ago
வெற்றிக் கொடி
11 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
18 days ago
வெற்றிக் கொடி
18 days ago
வெற்றிக் கொடி
18 days ago
வெற்றிக் கொடி
25 days ago
வெற்றிக் கொடி
25 days ago
வெற்றிக் கொடி
25 days ago