நீட் நுழைவுத் தேர்வு முடிவில் குளறுபடி; இணையதளத்தில் நீக்கம்

By செய்திப்பிரிவு

தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்ட நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவில் குளறுபடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வு முடிவுகள், தேர்வாணைய இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்திவருகிறது.

நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் www.nta.ac.in, www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் நேற்று மாலை வெளியாகின. இதில், மொத்தம் 7 லட்சத்து 71,500 (56.44%) பேர் மருத்துவம் படிக்கத் தகுதி பெற்றனர்.

இதற்கிடையே மாநிலங்களில் தேர்வெழுத விண்ணப்பித்தவர்கள், நீட் தேர்வில் கலந்துகொண்டவர்கள், தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்பான புள்ளிவிவரம் வெளியிடப்பட்டது.

இதில் தெலங்கானாவில் 54 ஆயிரத்து 872 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 50 ஆயிரத்து 392 பேர் தேர்வு எழுதிய நிலையில், 1,738 பேர் தேர்வாகியுள்ளனர். இந்நிலையில் தேர்ச்சி விகிதம் 49.15% என அறிவிக்கப்பட்டுள்ளது. திரிபுராவில் 3,536 பேர் தேர்வு எழுதிய நிலையில் 88,889 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேபோல் உ.பி.யில் 1.56 லட்சம் பேரில் 7 ஆயிரத்து 323 பேர் மட்டுமே தேர்வான நிலையில் தேர்ச்சி விகிதம் 60.79% என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் 12,047 பேர் தேர்வு எழுதிய நிலையில் 37,301 பேர் தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாநிலத் தேர்ச்சி விகிதத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் குழப்பம் நிலவியது. இதனால் தேர்வு முடிவுகள் என்டிஏ இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. சரியான புள்ளிவிவரம் விரைவில் பதிவேற்றப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

8 hours ago

வெற்றிக் கொடி

8 hours ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்