சுமார் 14 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் இன்று (அக்.16-ம் தேதி) வெளியாக உள்ளன. மாலை 4 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் 80,005 எம்பிபிஎஸ் இடங்கள், 26,949 பிடிஎஸ் இடங்கள், சித்த மருத்துவம் உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்காக 52,720 இடங்கள், 525 பிவிஎஸ்சி மற்றும் ஏஎச் இடங்கள் உள்ளன. இவற்றுக்காக இந்தியா முழுவதும் 2020-21 ஆம் கல்வி ஆண்டு மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, கரோனா தொற்றுப் பரவலுக்கிடையில் செப்.13-ம் தேதி நடைபெற்றது. தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) நீட் தேர்வை நடத்தியது.
தமிழகத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் உட்பட நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில், 85 முதல் 90 சதவீதத்தினர் நீட் தேர்வில் பங்கேற்றதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
எனினும் கரோனா தொற்று காரணமாக ஏற்கெனவே நடைபெற்ற தேர்வை எழுதாதவர்கள் மற்றும் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அக்.14-ம் தேதி மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சுமார் 14 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் இன்று (அக்.16-ம் தேதி) வெளியாக உள்ளன. மாலை 4 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நீட் இறுதி விடைகள் பட்டியல், விரைவில் வெளியாக உள்ளது.
தேர்வு முடிவுகள் www.nta.ac.in, www.ntaneet.nic.in என்ற இணையதளங்களில் வெளியிடப்படுகின்றன. இத்துடன் நீட் தரவரிசைப் பட்டியல் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்களும் வெளியாக உள்ளன. மாணவர்களின் கட்-ஆஃப் மதிப்பெண்களைப் பொறுத்து, மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியும்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
16 hours ago
வெற்றிக் கொடி
16 hours ago
வெற்றிக் கொடி
16 hours ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago