பொறியியல் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி: நவ.15 வரை விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

பொறியியல் பட்டம், பட்டயம் பெற்றவர்கள் தொழில்பழகுநர் வாரியத்தில் ஓராண்டுப் பயிற்சிக்கு நவம்பர் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக தென்னிந்திய தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் இயங்கி வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் இதன் சேவைப் பகுதிகளாக உள்ளன. இவ்வாரியம் மூலம் பொறியியல் பட்டம், பட்டயம், மேல்நிலைக் கல்வி முடித்தவர்களுக்கு மாத உதவித்தொகையுடன் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இப்பயிற்சி அந்தந்த மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு பிறகு தொழில் பழகுநர் வாரியம் வழங்கும் சான்றிதழ் மூலம் பல்வேறு அரசுத்துறை வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பொறியியல் பட்டம், பட்டயம் பெற்றவர்கள், மேல்நிலைக் கல்வி முடித்தவர்களுக்கு மாத உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் வாரியத்தில் ஓராண்டுப் பயிற்சிக்கு நவம்பர் 15-ம் தேதி வரை வின்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆன்லைன் முறையில் வின்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கூடுதல் விவரங்களுக்கு: www.boat-srp.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்