ஜேஇஇ பிரதானத் தேர்வு: தவறவிட்ட மாணவர்கள் 2021-ல் நேரடியாகத் தேர்வெழுதலாம்

By செய்திப்பிரிவு

ஜேஇஇ முதல்நிலைத் தேர்வில் தகுதி பெற்று, ஜேஇஇ பிரதானத் தேர்வை எழுதாத மாணவர்கள் 2021-ல் நடைபெறும் ஜேஇஇ பிரதானத் தேர்வில் நேரடியாகக் கலந்துகொள்ளலாம் என்று ஐஐடி டெல்லி தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள ஐஐடி,என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இது ஜேஇஇ முதல்நிலை தேர்வு, ஜேஇஇ பிரதானத் தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும்.

இதற்கிடையே கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுக்கு 8.58 லட்சம் மாணவர்கள் பதிவு செய்தனர். இதில் 6.35 லட்சம் மாணவர் தேர்வில் கலந்துகொண்டனர். சுமார் 25% பேர் தேர்வெழுதவில்லை. இதில் 2.5 லட்சம் மாணவர்கள் ஜேஇஇ பிரதானத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர்.

செப்.27-ம் தேதி நடைபெற்ற ஜேஇஇ பிரதானத் தேர்வில் 1.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். கரோனா தொற்றால் பாதிப்பு, நோய்ப் பரவல் குறித்த அச்சம், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசித்த மாணவர்கள் தேர்வை எழுதவில்லை.

இந்நிலையில் ஜேஇஇ முதல்நிலைத் தேர்வில் தகுதி பெற்று, ஜேஇஇ பிரதானத் தேர்வை எழுதாத மாணவர்கள் 2021-ல் நடைபெறும் ஜேஇஇ பிரதானத் தேர்வில் நேரடியாகக் கலந்துகொள்ளலாம் என்று ஐஐடி டெல்லி தெரிவித்துள்ளது. இத்தகவலை ஐஐடி டெல்லி இயக்குநர் ராம்கோபால் ராவ் உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்த ஆண்டு ஜேஇஇ தேர்வுகளை ஐஐடி டெல்லி நடத்தியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்