பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வுகளை முறையாக எழுதாத மாணவர்களுக்கு ஆப்சென்ட் அளிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரோனா சூழல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்பட்டன.
பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்ட் 12-ம் தேதி தொடங்கி நடைபெற்றன. மேலும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் செப். 22-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி முடிவடைந்தது. தேர்வுகள் ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடத்தப்பட்டு, செயற்கை நுண்ணறிவு முறையில் கண்காணிக்கப்பட்டது.
இந்நிலையில் பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வைச் சில மாணவர்கள் முறையாக எழுதவில்லை என்று புகார் எழுந்தது. அத்தகைய மாணவர்களின் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் திரட்டியுள்ளது. முறையான விதிமுறைகளைப் பின்பற்றித் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஆப்சென்ட் வழங்கப்பட்டு, மதிப்பெண்கள் வழங்கப்படாது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியகியுள்ளன.
அதேபோல இந்த வார இறுதியில் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago