பொறியியல் மாணவர் சேர்க்கையில் 2-ம் சுற்று கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்க 22,902 மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.63 லட்சம் இடங்கள் உள்ளன. இதில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க 1.12 லட்சம் பேர் தகுதி பெற்றனர். முதல்கட்டமாக நடத்தப்பட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் 457 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 8-ம் தேதி தொடங்கியது. இதில் முதல் சுற்றில் பங்கேற்க 12,263 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் முன்பதிவு கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. 95 சதவீத மாணவர்கள் கட்டணம் செலுத்தியதாக கூறப்படுகிறது.
16-ம் தேதி ஒதுக்கீட்டு ஆணை
இதையடுத்து, மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான கல்லூரிகள், பாடப் பிரிவுகளை இணையதளம் (www.tneaonline.org) வழியாக இன்றும், நாளையும் (அக்.12, 13) தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பிறகு தற்காலிக ஒதுக்கீடு பட்டியல் 14-ம் தேதிவெளியாகும். அதற்கு மாணவர்கள் ஒப்புதல் தந்ததும் இறுதி ஒதுக்கீட்டு ஆணை 16-ம் தேதி வழங்கப்படும்.
இதற்கிடையே, 2-ம் சுற்றுகலந்தாய்வு இன்று (அக்.12) தொடங்குகிறது. இதில் பங்கேற்க22,902 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள னர். அதன்படி, மாணவர்கள் இன்றுமுதல் 15-ம் தேதி வரை கட்டணம் செலுத்துவார்கள். அதன்பிறகு கல்லூரிகள் தேர்வு உள்ளிட்ட அடுத்தகட்ட பணிகள் தொடங்கும்.
கலந்தாய்வில் பங்கேற்பதற் கான வழிகாட்டுதல்கள், கல்லூரி களின் விவரப் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், அருகே உள்ள உதவி சேவை மையங்களை அணுகலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago