பல்கலைக்கழக பருவத்தேர்வில் ஒரே மாதிரியான விடைத்தாள்களால் குழப்பம்

By செய்திப்பிரிவு

கரோனா பரவல் காரணமாக தமிழக கல்லூரிகளில் பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பல்கலைக்கழகங்கள் அதன் இணைப்பு கல்லுாரி மாணவர்களை வீட்டில் இருந்தே தேர்வு எழுதி விடைத்தாள்களை தபால் மூலம்அனுப்ப அறிவுறுத்தி இருந்தன. இந்நிலையில், பருவத் தேர்வுகள் முடிந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்போது பல விடைத்தாள்கள் ஒரேமாதிரி இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறியபோது, ‘‘விடைத்தாள்களை ஆய்வு செய்ததில் பல மாணவர்களின் விடைகள் ஒரேமாதிரியாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 6 பல்கலை.யில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடைத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரே முகவரியில்இருந்து பல மாணவர்கள் ஒன்றாக விடைத்தாளை அனுப்பியுள்ளனர். இதுகுறித்து நடந்த முதல்கட்ட விசாரணையில் மாணவர்கள் தங்கள் நண்பர்களின் வீடுகள்அல்லது வேறு பொதுவான இடங்களில் குழுவாக சேர்ந்து 'மாஸ் காப்பி' அடித்துள்ளனர். இதுதொடர்பாக கல்லூரி அளவிலான விசாரணைநடக்கிறது. ஒரேமாதிரியான விடைத்தாள்களை சேகரித்து அவற்றின்மதிப்பீட்டை நிறுத்தி வைக்கவும்பல்கலைக்கழகங்கள் முடிவு செய்துள்ளன’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

25 days ago

வெற்றிக் கொடி

25 days ago

வெற்றிக் கொடி

25 days ago

வெற்றிக் கொடி

25 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்