பள்ளிகள் திறப்பில் தமிழகத்தைப் பின்பற்றுக: புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்

By செ.ஞானபிரகாஷ்

கல்வியில் தமிழகத்தைப் புதுச்சேரி அரசு பின்பற்றுகிறது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக மறுமுடிவு எடுக்கும்போது புதுச்சேரி அரசும் முடிவு எடுப்பதுதான் நல்லது. இதனால் பள்ளிகள் திறப்பது பற்றி அரசு யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளைத் திறந்து தூய்மை செய்யும் பணி நடந்து வருகிறது. வரும் 8-ம் தேதி முதல் பள்ளி வகுப்புகள் தொடங்க உள்ளன. 9 முதல் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ள பாட சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகுப்புகள் காலை முதல் மதியம் 1 மணி வரை முதல் கட்டமாக நடைபெற உள்ளன.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி இன்று வெளியிட்ட அறிக்கை:

''புதுச்சேரியில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதிலும், தொற்று விஷயத்திலும் சரியாக முடிவு எடுக்க முடியாமல் அரசு இருந்து வருகிறது.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி, புதுச்சேரி அரசு அவசரமாக முடிவு எடுத்துள்ளது. கரோனா தொற்று பரவும் சூழலில் பள்ளிகளைத் திறக்க அரசு அனுமதி தந்துள்ளது. இதன் அடிப்படையில் பள்ளிக்கு மாணவர்களை அனுப்பினால் மாணவர்களிடம் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

கல்வியில் தமிழகத்தைப் புதுச்சேரி அரசு பின்பற்றுகிறது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக மறுமுடிவு எடுக்கும் போது புதுச்சேரி அரசும் முடிவு எடுப்பதுதான் நல்லது. இந்த அபாயகர சூழலில் மாணவர்களுக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், மாணவர்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதும் அரசின் கடமையாகும். இதனால் பள்ளிகள் திறப்பது பற்றி அரசு யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

ஆந்திராவில் பள்ளி சென்று வந்துள்ள மாணவர்களுக்குக் கரோனா தொற்று உறுதியானதாகத் தெரியவந்துள்ளது. இதனால் ஏனாமில் பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியுள்ளார். மத்திய அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றிப் புதுச்சேரி அரசு செயல்பட வேண்டும்''.

இவ்வாறு ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

28 days ago

வெற்றிக் கொடி

28 days ago

வெற்றிக் கொடி

28 days ago

வெற்றிக் கொடி

28 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்