ஜிப்மரில் எம்பிபிஎஸ் பட்டப் படிப்பிற்கு நீட் மதிப்பெண் அடிப்படையில் மத்திய அரசே கலந்தாய்வை நடத்தும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றுக்கெனத் தனி நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை ஜிப்மர் நிர்வாகம் நடத்தி வந்தது. இந்த முறை ஜிப்மர் மாணவர் சேர்க்கைக்கும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதனால் கலந்தாய்வை மத்திய அரசே நடத்தும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜிப்மர் முதல்வர் இன்று விடுத்துள்ள அறிவிப்பில், ''புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளில் 2020-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நீட் மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்படும். இதற்கான கலந்தாய்வை மத்திய சுகாதாரத் துறையின் மருத்துவக் கலந்தாய்வுக் குழுவே நடத்தும்.
எனவே, 2020 மருத்துவப் படிப்பிற்குத் தனித் தேர்வோ, கலந்தாய்வோ ஜிப்மர் சார்பில் நடத்தப்படாது. கூடுதல் விவரங்களை http://www.mcc.nic.in/ என இணைய முகவரியில் மாணவர்கள் பெறலாம்'' என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
30 days ago
வெற்றிக் கொடி
30 days ago
வெற்றிக் கொடி
30 days ago
வெற்றிக் கொடி
30 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago