10, 12-ம் வகுப்பு மறுதேர்வுகள் அக்.6-ம் தேதி தொடங்கப்படும் என்று சிஐஎஸ்சிஇ (இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில்) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ வாரியங்களில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள், கம்பார்ட்மெண்ட் எக்ஸாம் எனப்படும் மறுதேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு 2020-ம் ஆண்டு பொதுத்தேர்வில் மாணவர்கள் 10-ம் வகுப்பில் 99.34 சதவீதத் தேர்ச்சியும் 12-ம் வகுப்பில் 96.84% தேர்ச்சியும் பெற்றனர்.
இதில் கம்பார்ட்மெண்ட் பகுதியில் இருப்பவர்களுக்கான தேர்வுகள் அக்.6-ம் தேதி முதல் நடத்தப்படும் என்று சிஐஎஸ்சிஇ அறிவித்துள்ளது. அக்.6 முதல் 9-ம் தேதி வரை தேர்வு நடைபெறும். இதற்கான தேர்வு முடிவுகள் அக்.17-ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வறையில் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, சானிடைசர் கொண்டு சென்று, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும். அதேநேரத்தில் கையுறைகளை விரும்பினால் மாணவர்கள் அணியலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஐசிஎஸ்இ 12-ம் வகுப்புக்கான தேர்வு நடந்து கொண்டிருந்தபோதே கரோனா வைரஸ் பரவல் நாட்டில் தொடங்கியதால், தேர்வுகள் நடத்தப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 10-ம் வகுப்புத் தேர்வும் நடத்தப்படவில்லை.இதைத் தொடர்ந்து ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பொதுத் தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு மறுதேர்வுகள் செப்.22-ல் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago