கரோனா ஊரடங்கு அமலில் உள்ளநிலையில் பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைன் வழியாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
பொறியியல், மருத்துவத் துறை
அந்த வகையில், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் (NDRF), FIITJEE உடன் இணைந்து நடத்தும் ‘இன்ஸ்பைரோ’ எனும் பொறியியல் மற்றும் மருத்துவத் துறை சார்ந்த வழிகாட்டி நிகழ்ச்சி கடந்த வாரம் வெள்ளி, சனி ஞாயிறுஆகிய நாட்களில் நடைபெற்றது. அதன் 2-வது அமர்வு நாளை (செப்.25) முதல் 3 நாட்கள் ஆன்லைனில் நடக்க உள்ளது.
முதல் நாளான வெள்ளியன்று, சென்னை மருத்துவக் கல்லூரியின்நெப்ராலஜிஸ்ட் டாக்டர் சக்திராஜன், ‘நவீன மருத்துவத்தில் ஆராய்ச்சி: ஒரு விருப்பமல்ல; ஆனால் தேவை’ எனும் தலைப்பிலும், சனியன்று சென்னை ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையம் (ஆர்ஐசி), டிஆர்டிஓ, இயக்குநர் டாக்டர் வி.நடராஜன், ‘கப்பற்படை அமைப்புகளில் ஆராய்ச்சி வாய்ப்புகள்’ எனும் தலைப்பிலும், ஞாயிறன்று கான்பூர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி இயந்திரவியல் துறை பேராசிரியர் டாக்டர் ஜெ.ராம்குமார், ‘ஐஐடி: கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள்’ எனும்தலைப்பிலும் உரையாற்ற உள்ளனர்.
9 முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் இதில் பங்கேற்கலாம். பங்கேற்க கட்டணம் கிடையாது.மாலை 6 முதல் 7 மணி வரை நிகழ்வுநடைபெறும். இதில் பங்கேற்கhttps://connect.hindutamil.in/event/37-inspiro.html என்ற லிங்க்கில் பதிவுசெய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சிறந்த கேள்வி கேட்கும்மாணவர்களுக்கு மயில்சாமி அண்ணாதுரை கையெழுத்திட்ட, ராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய ‘அடுத்த கலாம்’ நூல் வழங்கப்படும்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago