முதலாமாண்டு மாணவர்களுக்கு நவ.1 முதல் வகுப்புகள்; மார்ச்சில் தேர்வு: யுஜிசி கால அட்டவணை வெளியீடு

By செய்திப்பிரிவு

கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு நவ.1 முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ள மத்திய கல்வி அமைச்சகம், யுஜிசி கால அட்டவணையை அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக 6 மாதங்களாகக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே மத்திய, மாநில அரசுகள் படிப்படியாகத் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இதைத் தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே யுஜிசி, கல்லூரிகள் தொடங்கி வகுப்புகள் நடைபெறுவதற்கான கால அட்டவணையை வெளியிட்டது. இதற்கு ஒப்புதல் அளித்து மத்திய கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி, ''மாணவர் சேர்க்கைக்கான பணிகள் அனைத்தும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். நவம்பர் 1-ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். மார்ச் 8 முதல் 26-ம் தேதி வரை முதல் செமஸ்டர் தேர்வு நடைபெற வேண்டும்.

ஏப்ரல் 5-ம் தேதி அடுத்த செமஸ்டர் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். ஆகஸ்ட் 9 முதல் 21-ம் தேதி வரை இரண்டாவது செமஸ்டர் தேர்வு நடைபெற வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அட்டவணையை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

மேலும்