கரோனா தொற்றுக்கு மத்தியில் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு மறுதேர்வுகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன.
10 மற்றும் 12-ம் வகுப்பில் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள் மறுதேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் 1,50,198 பேரும் 12-ம் வகுப்பில் 87,651 பேரும் இந்தப் பிரிவில் இருந்தனர். இவர்களுக்கான தேர்வுகள் செப்.22 முதல் நடத்தப்படும் என்று ஏற்கெனவே சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.
கரோனா பரவல் காரணமாக இத்தேர்வுகள் இந்த ஆண்டு மட்டும் ரத்து செய்யப்படலாம் என்று தகவல் வெளியான நிலையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மறுதேர்வை 2.38 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
10-ம் வகுப்புக்கு செப். 22, 23, 25, 26 மற்றும் 28 ஆகிய தேதிகளிலும் 12-ம் வகுப்புக்கு 22, 23, 24, 25, 26, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் மறுதேர்வுகள் நடைபெறுகின்றன.
தேர்வுகளை நடத்தி முடித்து, விரைவாகத் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று சிபிஎஸ்இக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago