இன்ஜினீயரிங் படிப்புக்கு மற்ற துறைகளைவிட வேலைவாய்ப்பு அதிகம் என்று தேசிய தொழில்நுட்ப நிறுவன முன்னாள் இயக்குநர் டாக்டர் சீனிவாசன் சுந்தர்ராஜன் கூறினார்.
‘இந்து தமிழ் திசை’, தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் (NDRF), FIITJEE உடன் இணைந்து ‘இன்ஸ்பைரோ’ என்றஆன்லைன் பொறியியல் மற்றும் மருத்துவத் துறை வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்துகிறது.
3-ஆம் நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவன முன்னாள் இயக்குநர் டாக்டர் சீனிவாசன் சுந்தர்ராஜன், ‘தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி): கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
நான் படிக்கிற காலத்தில் இருந்த சூழல் மாறி தற்போது பல துறைகளிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மாறிக்கொண்டே இருக்கும் காலத்தோடு சேர்ந்து நாமும் மாற வேண்டும்.மற்ற படிப்புகளில் இருப்பதைவிட இன்ஜினீயரிங் படித்தால் வேலைவாய்ப்பும் அதிகம். இன்ஜினீயரிங்முடித்துவிட்டு வேறு துறைக்குமாறிக்கொள்ளவும் முடியும். பொதுவாக, படிப்புக்கும் தொழில் செய்வதற்கும் பெரிய இடைவெளி இருப்பதாக சொல்வதுண்டு. ஆனால், என்ஐடி-யில் படிக்கும்போது அந்த இடைவெளி வெகுவாக குறைந்துவிடும்.
என்ஐடி-யில் படிக்கும்போது ஆராய்ச்சி செய்வதற்கான நிறையவாய்ப்புகள் உண்டு. சர்வதேச அளவிலான அறிஞர்கள் வருவார்கள். ஒர்க்ஷாப், செமினார்போன்றவை மூலமாக புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளிநாட்டு கம்பெனிகள் மூலமாக ஸ்காலர்ஷிப் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. இன்றைக்கு ஆன்லைன் வழியாக நிறைய கோர்ஸ்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. நமக்கு தேவையானதை தேர்வுசெய்து படிப்பதன் மூலமாக சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்.
இவ்வாறு டாக்டர் சீனிவாசன் சுந்தர்ராஜன் கூறினார்.
இந்த ஆன்லைன் நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ சர்குலேஷன் பொது மேலாளர் டி.ராஜ்குமார் நெறிப்படுத்தினார். இதன் அடுத்த நிகழ்வு வரும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறவுள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். பங்கேற்க கட்டணம் கிடையாது. தினமும் மாலை 6 முதல் 7 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறும்.
இதில் பங்கேற்க https://connect.hindutamil.in/event/37-inspiro.html என்ற லிங்க்கில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
கடந்த 3 நாட்கள் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்க தவறியவர்கள் https://www.youtube.com/watch?v=0mvjIsrz0w4, https://www.youtube.com/watch?v=xNd9PJiAc74, https://www.youtube.com/watch?v=aiqtptSI5U4 ஆகிய யூ-டியூப் லிங்க்கில் பார்க்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
10 days ago
வெற்றிக் கொடி
10 days ago
வெற்றிக் கொடி
10 days ago
வெற்றிக் கொடி
10 days ago
வெற்றிக் கொடி
17 days ago
வெற்றிக் கொடி
17 days ago
வெற்றிக் கொடி
17 days ago
வெற்றிக் கொடி
17 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago