அரசு கல்லூரிகளில் 69,000-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பின

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கல்லூரிக்கல்வி இயக்குநரகத்தின்கீழ் இயங்கும் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. அதில் 128 வகையான இளநிலை பட்டப்படிப்புகள் உள்ளன. அதன்படி, இணையவழியில் 3.12 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட அதிக விண்ணப்பங்கள் வந்ததால், நடப்பு கல்வி ஆண்டுக்கும் 20 சதவீத கூடுதல் இடங்களுக்கு அரசு அனுமதி வழங்கியது. முன்னதாக கல்லூரி அளவிலான தரவரிசை வெளியிடப்பட்டு ஆக. 28-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக உயர்கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் தற்போதுவரை 80 சதவீத இடங்கள், அதாவது 69,600-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும், 20 அரசு கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விடவும் குறைவான விண்ணப்பங்களே பெறப்பட்டுள்ளன. அந்த கல்லூரிகளில் உள்ள இடங்களை நிரப்ப வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், அரசு உத்தரவின்படி, 20 சதவீதம் கூடுதலாக உள்ள இடங்களுக்கான மாணவர் சேர்க்கைப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்