இந்தியப் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் மத்திய பல்கலைக்கழக மதிப்பீட்டில் 9-வது இடத்துக்கு புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் முன்னேறியுள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''அவுட்லுக்- ஐகேர் அண்மையில் வெளியிட்ட 2020 இந்தியப் பல்கலைக்கழகத் தரவரிசையில், புதுவைப் பல்கலைக்கழகம் குறிப்பிடத்தக்க வகையில் தனது தகுதிப் புள்ளிகளை அதிகரித்துள்ளது.
புதுவைப் பல்கலைக்கழகம் மத்திய பல்கலைக்கழகங்களில் 9-வது இடத்தையும், பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் பிரிவில் 45-வது இடத்தையும் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 1000 புள்ளிகளில் 647.63 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. கல்வி மற்றும் ஆராய்ச்சி சிறப்பிற்காக 277.20 புள்ளிகளையும், தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்காக 134.62 புள்ளிகளையும், உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுக்காக 77.53 புள்ளிகளையும், ஆளுமை மற்றும் சேர்க்கைகளுக்கு 99.6 புள்ளிகளையும், பன்முகத்தன்மைக்கு 58.68 புள்ளிகளையும் பெற்றுள்ளது. கடந்த காலத்தோடு ஒப்பிடும்போது இது ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
» பாலிடெக்னிக் இறுதி ஆண்டு பருவத் தேர்வு: வீட்டிலிருந்தே எழுத தயாராக இருக்க அறிவுறுத்தல்
» ‘நீட்’ தேர்வில் 90 சதவீத மாணவர்கள் பங்கேற்பு: ‘கீ ஆன்சர்’ ஒரு வாரத்தில் வெளியாகும்
2019-ம் ஆண்டின் தரவரிசையில் புதுவைப் பல்கலைக்கழகம் மத்திய பல்கலைக்கழகங்களில் 11-வது இடத்தைப் பிடித்தது. இப்போது 2 புள்ளிகள் முன்னேறி 9-வது இடத்தைப் பெற்றுள்ளது. இதனால் நாட்டின் சிறந்த 10 மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்று என்ற மதிப்புமிக்க நிலையை அடைந்துள்ளது.
மேலும், 2019-ம் ஆண்டில் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் பிரிவில் தரவரிசையில் புதுவைப் பல்கலைக்கழகம் 67-வது இடத்தைப் பெற்றிருந்தது. இப்போது 22 புள்ளிகள் முன்னேறி, இந்தப் பிரிவில் 45-வது இடத்தைப் பெற்றுள்ளது, நாட்டின் சிறந்த 50 கல்வி நிறுவனங்களில் ஒன்று என்ற பெருமையைப் புதுவை பல்கலைக்கழகம் பெற்றுள்ளது''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago