அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு; போதிய அளவில் ஆசிரியர்கள், வகுப்பறைகள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

By செய்திப்பிரிவு

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ற வகையில் வகுப்பறைகள், ஆசிரியர்கள் இருப்பதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் 2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆக.17-ம் தேதி தொடங்கியது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வேறு பள்ளிகளில் இருந்து மாறுதல் பெறும் மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 24-ம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கியது.

இதற்கிடையே ஆகஸ்ட் இறுதியிலேயே மாணவர் சேர்க்கை 10 லட்சத்தைத் தாண்டியது. தற்போது 12 லட்சத்தைத் தாண்டி மாணவர்கள் சேர்க்கை உயர்ந்து வருகிறது. விரைவில் இந்த எண்ணிக்கை 15 லட்சத்தை எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும் அதற்கேற்ற வகையில் வகுப்பறைகள், ஆசிரியர்கள் இருப்பதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையம் அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கன்று வளர்ப்பு, பயிர்க் கடன், தனிநபர் கடன் என சுமார் ரூ.4 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் இன்று நடைபெற்றன. இதில் பங்கேற்ற பிறகு அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, ''இப்போது இருக்கும் ஆசிரியர்களை வைத்துக்கொண்டே கற்றல் பணிகளை நிறைவேற்ற முடியும். வகுப்பறைகளைப் பொறுத்தவரையில் போதுமான அளவு இருக்கின்றன. ஒருசில இடங்களில் சேர்க்கை அதிகரித்து கூடுதல் மாணவர்கள் சேர்ந்தால், முதல்வரின் ஒப்புதலைப் பெற்று அவர்களுக்கான கட்டிட வசதிகள் கட்டப்படும்'' என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்