ஐஐடி, என்ஐடி பொறியியல் கல்லூரிகளுக்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வு: மதுரையில் 50 சதவீத மாணவர்கள் பங்கேற்பு  

By என்.சன்னாசி

மதுரையில் நடந்த ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசு பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்களில் 50 சதவீத மாணவர்களே பங்கேற்றனர்.

மத்திய அரசின் (ஐஐடி, என்ஐடி) பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வு மதுரை ஆஸ்டியன்பட்டி பிடிஆர், பொறியியல் கல்லூரி, லதா மாதவன் பாலிடெக்னிக், விக்ரம் கல்வியியல் கல்லூரி உட்பட 4 மையங்களில் இன்று நடந்தது.

காலை 9 முதல் 12 வரை ஒரு குழுவும், மதியம் 3 முதல் 6 மணிவரை மற்றொரு குழுவும் தேர்வு எழுதி னர்.

மதுரை, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

தொற்று தடுப்புக்கான காய்ச்சல் கண்டறிதல், சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்தல் போன்ற விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. ஒவ்வொரு அறையிலும் சமூக இடைவெளியுடன் கூடிய சேர், டேபிள்கள் போடப்பட்டு இருந்தன.

தேர்வறைக்குள் செல்வதற்கு முன்னதாக எலக்ட்ரானிக் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என, மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஒவ்வொரு மையத்திலும் சுமார் 500 பேர் வரை தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கரோனா தடுப்புக்கான ஊரடங்கு, ஏப்ரலில் நடக்கவேண்டிய இத்தேர்வு தாமதமானதாலும், கலை அறிவியல் கல்லூரிகளில் சிலர் சேர்ந்ததாலும் 50 சதவீதம் பேர் மட்டுமே பங்கேற்றதாக தேர்வு நடத்தும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்