செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் புதிதாக நிறுவப்பட உள்ள சாயி பல்கலைக்கழகத்தின் ரூ.600 கோடி மதிப்பிலான கட்டிடத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னையில் கடந்த 2019, ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, சாயி பல்கலைக்கழகம் நிறுவுவது தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக தமிழக உயர்கல்வித் துறை மற்றும் சாயி கல்வி, மருத்துவம், ஆராய்ச்சி, அறக்கட்டளை நிறுவனம் இடையே முதல்வர் முன்னிலையில் ஜன.24-ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சாயி பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவில் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி, மூத்த வழக்கறிஞர், கல்வி மற்றும்பிற துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். சாயி பல்கலைக்கழகம் முதல்கட்டமாக முதல் 7 ஆண்டுகளில் ரூ.600 கோடி முதலீட்டில் 12 லட்சம் சதுர அடி பரப்பில் அமைகிறது. 6 ஆயிரம் மாணவர்கள், 300 பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள் 300 பேரை கொண்டு இயங்கும்.
இரண்டாம்கட்டமாக அடுத்த 5 ஆண்டுகளில் 30 லட்சம் சதுர அடிகட்டிட பரப்பில் 20 ஆயிரம் மாணவர்கள், 1,000 பேராசிரியர்கள், 1,000பணியாளர்களைக் கொண்டு இயங்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் 103.07 ஏக்கர் பரப்பில் சாயி பல்கலைக்கழகம் நிறுவப்படுகிறது. முதல்கட்டமாக ரூ.600 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள சாயி பல்கலைக்கழகத்தின் பிரதான வளாக கட்டிடத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன், ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின், தலைமைச் செயலர் கே.சண்முகம், உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா, சாயி பல்கலைக்கழக நிறுவனர் கே.வி.ரமணி உள்ளிட்டோர் பங் கேற்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago