நீட் 2020-ம் ஆண்டுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியான மூன்று மணி நேரத்துக்குள் 4 லட்சம் மாணவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது செப்டம்பர் 13-ம் தேதி அன்று நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.
கரோனா தாக்கம் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நுழைவுத் தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்று மாணவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். கரோனா காலத்திலும் தேர்வு திட்டமிட்ட தேதியில் கண்டிப்பாக நடைபெறும் என்று நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.
நீட் தேர்வுக்கு தேசிய அளவில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வுக்கான தேர்வு மையங்கள் 2,546-ல் இருந்து 3,843 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், நீட் தேர்வுக்கு ஒவ்வோர் அறையிலும் 24 மாணவர்களுக்குப் பதிலாக 12 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
» நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு
» நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
இதற்கிடையே இன்று (ஆக.26) நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தேசியத் தேர்வுகள் முகமை தளத்தில் 12 மணிக்கு வெளியிடப்பட்டது. ஹால் டிக்கெட் வெளியான மூன்று மணி நேரத்திலேயே 4 லட்சம் ஹால் டிக்கெட்டுகளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
https://ntaneet.nic.in/ntaneet/AdmitCard/AdmitCard.html என்ற இணைய முகவரியைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago