அரசு பள்ளியில் சேர்க்கையை அதிகரிக்க மாணவர்களுக்கு இலவச மொபைல் போன்: சொந்த செலவில் வழங்கும் தலைமை ஆசிரியர்

By இ.மணிகண்டன்

அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், இணைய வழிக் கல்வியைத் தொடரவும் பள்ளியில் சேரும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் டச் மொபைல் போனை சொந்த செலவில் வழங்கி வருகிறார் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர்.

கரோனா தொற்று அச்சத்தால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழக அரசு மாணவர் களுக்குப் பாடங்களை இணைய வழியாக மற்றும் தொலைக்காட்சி மூலம் நடத்தி வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசு வைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. முதல் வகுப்பு சேரும் அனைத்து மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் கே.ஜெயக்குமார் ஞானராஜ் தனது சொந்த செலவில் டச் மொபைல் போன் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறிய தாவது:

இக்கிராம மக்கள் அனைவரும் கூலித் தொழிலாளர்கள். அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், இணைய வழி மற்றும் வாட்ஸ்-ஆப் மூலம் பாடங்களை எளிதாகத் தடையின்றிப் படிக்கவும் மாணவர்களுக்கு மொபைல் போன் இலவசமாக வழங்குகிறேன். என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

19 hours ago

வெற்றிக் கொடி

19 hours ago

வெற்றிக் கொடி

19 hours ago

வெற்றிக் கொடி

19 hours ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

18 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

மேலும்