உலக யானைகள் தினத்தையொட்டி கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் யானைகளை பாதுகாக்க வலியுறுத்தி யானை முகக்கவசம் அணிந்து மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். 
நடப்புகள்

யானை முகக்கவசம் அணிந்த மாணவர்கள்: உலக யானைகள் தினத்தையொட்டி கோவில்பட்டியில் உறுதிமொழி ஏற்பு

எஸ்.கோமதி விநாயகம்

உலக யானைகள் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் மாணவர்கள் யானை முகக்கவசம் அணிந்து, யானைகளுக்கு எதிரான செயல்களைத் தடுத்து நிறுத்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

உலக யானைகள் தினத்தையொட்டி கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், ''மாணவர்கள் யானை முகக்கவசம் அணிந்திருந்தனர். அதைத் தொடர்ந்து யானைகளுக்கு எதிரான செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

வனப்பகுதியில் அதிகளவு பழ வகை மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். யானைகளின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும். கரோனாவில் இருந்து விலகி இருக்க அனைவரும் முகக்கவசம் அணிந்து வெளியில் செல்ல வேண்டும்'' என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

நிகழ்ச்சியில், பாரதியார் நினைவு அறக்கட்டளை நிர்வாகிகள் முத்து முருகன், தினேஷ் குமார், முருகன், முத்துகணேஷ், சிவபெருமாள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT