‘அமிர்தா விஷ்வா வித்யாபீடம்’ - ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சியில் இன்ஜினீயரிங் கவுன்சிலிங்- மாணவர் சேர்க்கை செயலாளர் புருசோத்தமன் நாளை விளக்கம்

By செய்திப்பிரிவு

‘அமிர்தா விஷ்வா வித்யாபீடம்’ - ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் நாளை (ஆகஸ்ட் 9) காலை 11 மணிக்கு இன்ஜினீயரிங் ஆன்லைன் கவுன்சிலிங் பற்றி தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை செயலாளர் டாக்டர் டி.புருசோத்தமன் விளக்கம் அளிக்க உள்ளார்.

பயனுள்ள பல்வேறு தகவல்கள்

பிளஸ் 2 முடித்துவிட்டு, பொறியியல் படிக்க ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். பொறியியல் ஆன்லைன் கவுன்சிலிங் குறித்து மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டும் வகையில் ‘அமிர்தா விஷ்வா வித்யாபீடம்’ உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘உயர்வுக்கு உயர்கல்வி’ எனும் ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

நாளை காலை நடைபெறும் இந் நிகழ்ச்சியில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் டி.புருசோத்தமன் பங்கேற்று, ஆன்லைனில் பதிவு செய்வது, சான்றிதழைப் பதிவேற்றம் செய்வது, கவுன்சிலிங்கில் பங்கேற்பது எப்படி என்பன உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள தகவல்களைப் பற்றி பேசவிருக்கிறார். இந்த நிகழ்ச்சியை ‘இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ்’ இணைந்து நடத்துகிறது.

கட்டணம் கிடையாது

இதில் பங்கேற்க கட்டணம் கிடையாது. அனைவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர் https://connect.hindutamil.in/uuk.php என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்