ஆசிரியர் தின விருது; கோவிட்-19, உம்பன் புயல் பணிகளும் கணக்கில் கொள்ளப்படும்: மேற்கு வங்க அரசு அறிவிப்பு

By பிடிஐ

ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் விருதுக்கான கணக்கீட்டில், கோவிட்-19 மற்றும் உம்பன் புயல் ஆகியவற்றின்போது மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகளும் கணக்கில் கொள்ளப்படும் என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளன்று (செப்டம்பர் 5) ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பல்வேறு மாநிலங்கள் சிறப்பாகப் பங்காற்றி வரும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி, கவுரவித்து வருகின்றன. அந்த வகையில் மேற்கு வங்க அரசும் 'சிக்‌ஷா ரத்னா' என்ற பெயரில், 40 தொடக்கப்பள்ளி, இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி வருகிறது.

20 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட ஆசிரியர்கள் இந்த விருதுக்குத் தகுதியானவர்கள் ஆவர். இந்நிலையில், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் விருதுக்கான கணக்கீட்டில், கோவிட்-19 மற்றும் உம்பன் புயல் நிவாரணப் பணிகளும் கணக்கில் கொள்ளப்படும் என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியான அரசின் செய்திக் குறிப்பில், ''விருதுக்கான மதிப்பெண் கணக்கீட்டில், கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் உம்பன் புயல் ஆகியவற்றின்போது ஆசிரியர்கள் மேற்கொண்ட நிவாரணப் பணிகள் மற்றும் மாணவர்களுக்கு அளித்த கல்வி வழிகாட்டல் ஆகியவை கணக்கில் கொள்ளப்படும். அதேபோல பள்ளிகளில் மதிய உணவு வழங்குதல், ஆன்லைன் கற்பித்தல், கலாச்சார நிகழ்வுகளை மேற்கொள்ள மாணவர்களை ஊக்கப்படுத்துவது ஆகியவையும் கணக்கில் கொள்ளப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்