பிளஸ் 1 பொதுத் தேர்வில் 97.51 சதவீத தேர்ச்சி பெற்று கரூர் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழகத்தில் இன்று (ஜூலை 31-ம் தேதி) பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் கரூர் மாவட்டம் 97.51 சதவீதத் தேர்ச்சி பெற்று, தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும், நகராட்சி, தனியார் மெட்ரிக், ஆதி திராவிடர் நலப் பள்ளிகளைச் சேர்ந்த 4,981 மாணவர்கள், 5,466 மாணவிகள் என மொத்தம் 10,447 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர்.
தேர்வில் 4,796 மாணவர்கள், 5,391 மாணவிகள் என மொத்தம் 10,187 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்படி, மாணவர்கள் 96.29 சதவீதம், மாணவிகள் 98.63 சதவீதம் என 97.51 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் கரூர் மாவட்டம் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. 185 மாணவர்கள், 75 மாணவிகள் என மொத்தம் 260 பேர் தேர்வில் தோல்வியடைந்தனர்.
» 33-வது முறை அடித்த அதிர்ஷ்டம்: கரோனா வைரஸால் 10-ம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த ஹைதராபாத் மனிதர்
கடந்த ஆண்டு 96.65 சதவீதத் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 12-வது இடத்தில் இருந்த நிலையில், நிகழாண்டு 0.86 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3-வது இடத்திற்குக் கரூர் மாவட்டம் முன்னேறியுள்ளது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago