12-ம் வகுப்பு மறுதேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் நேரடித் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 31) வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதிய 519 மாணவர்களில் 180 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 இறுதித்தேர்வில் கணிசமான மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்துத் தேர்வெழுதாத மாணவர்களுக்கு கடந்த 27-ம் தேதி மறுதேர்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 290 மையங்களில் மாணவர்கள் தேர்வெழுதினர். பள்ளி மாணவர்கள் 147 பேர் மற்றும் நேரடித் தனித்தேர்வர்கள் 372 பேர் என மொத்தம் 519 பேர் இந்தத் தேர்வில் கலந்துகொண்டனர்.
இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 31) வெளியிடப்பட்டுள்ளன. இதில் மறுதேர்வு எழுதிய 519 மாணவர்களில் 180 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். 92 பள்ளி மாணவர்கள் மற்றும் 88 நேரடித் தனித்தேர்வர்கள் என மொத்தம்180 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வு முடிவுகளை எப்படித் தெரிந்துகொள்வது?
தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் வழியாக அறிந்து கொள்ளலாம்.
» பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியான தேர்ச்சி விவரங்கள்
» பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்: 98.10% தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்த கோவை மாவட்டம்
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக தேர்வு முடிவு அனுப்பப்படும்.
தனித்தேர்வர்களுக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்குத் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago