அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கொடிவேரி அணையில் அடிப்படை வசதிகள் மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான பணிகளை அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை. தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மதிப்பெண் தொடர்பாக விளம்பரப் பலகை வைக்கக் கூடாது. மீறி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
11-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகளை அறிவிப்பதற்காக முதல்வரிடம் தேதி கேட்டிருக்கிறோம். அவர் குறிப்பிட்டவுடன் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். அதேபோல ஆகஸ்ட் மாதத்தில் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும்.
» அண்ணா பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள்: பட்டியல் வெளியீடு
» புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: மாலை 4 மணிக்கு முழு விவரம் வெளியாகிறது
பெற்றோரின் விருப்பத்திற்கேற்ப பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, பள்ளிகள் திறப்பு தள்ளிப் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago