4.89 கோடி தரவுகள்: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக மத்திய அரசின் தேசிய டிஜிட்டல் நூலகம்

By க.சே.ரமணி பிரபா தேவி

புத்தகங்கள், வீடியோ பாடங்கள் என சுமார் 4.89 கோடி தரவுகளுடன் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக மத்திய அரசு, தேசிய டிஜிட்டல் நூலகத்தை அமைத்துள்ளது.

ஏற்கெனவே இந்த மின்னணு நூலகம் உருவாக்கப்பட்டிருந்தாலும் கரோனா காலப் பொது முடக்கத்தை முன்னிட்டு ஏராளமான தரவுகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் இந்த நூலகம் செயல்படுகிறது. பள்ளிக் கல்வி, சிபிஎஸ்இ தேர்வுகள் தயாரிப்பு, பொறியியல், அறிவியல், மானுடவியல், இலக்கியம், சட்டம், மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பாடங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை என்சிஇஆர்டி மற்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட 20 பள்ளிக் கல்வி வாரியங்களின் பாடத்தொகுப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவைதவிர பொதுவான வாசிப்புக்கு என்பிடியின் புத்தகங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த மின்னணு நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் https://ndl.iitkgp.ac.in/ என்ற இணைய முகவரிக்குள் நுழைந்து, தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். இதன்பின் இவர்கள் டிஜிட்டல் உறுப்பினர்களாகக் கருதப்படுவர். அவர்களுக்குத் தனிப் பயன்பாட்டுப் பெயர், கடவுச்சொல் வழங்கப்படும். அதைப் பயன்படுத்தி மின்னணுப் புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதன் மூலம் மத்திய அரசின் புத்தகங்கள், வீடியோ பாடங்கள், ஆடியோ, கேள்வி பதில்கள் என சுமார் 4.89 கோடி தரவுகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அத்துடன் கோவிட்-19 நோயை வெல்ல உதவும் யோசனைகள், ஆராய்ச்சிகள், கருத்தரங்குகள், சவால்கள் உள்ளிட்ட தகவல்களும் இந்த தேசிய டிஜிட்டல் நூலகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த நூலகம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்