பொறியியல் கலந்தாய்வு: மாணவர்கள் இன்று முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பம் இணைய வழியில் இன்று மாலை 6 மணிக்குத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 530-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளில் 2.5 லட்சம் வரையான இடங்கள் உள்ளன. இதற்கான இணையதளக் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்

இதற்கிடையே கரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் தொடங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’பொறியியல் கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான அனைத்துப் பணிகளும் முடிந்துள்ளன. கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கைக்கு 52 உதவி மையங்கள் அமைக்கப்படும். ஆகஸ்ட் 16-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல் சேர்க்கை குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை வெளியிட முடியும். கல்லூரிகள் கரோனா நோய்க்கான தனிமைப்படுத்தல் முகாம்களாக இருப்பதால், அவற்றை இப்போதைக்குத் திறக்க வாய்ப்பு கிடையாது. கலை, அறிவியல் படிப்புகள் குறித்த அறிவிப்பு 2 நாட்களில் வெளியிடப்படும்’’ என்றார் அமைச்சர் அன்பழகன்.

எப்படி விண்ணப்பிப்பது?
www.tneaonline.org என்ற இணைய முகவரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

29 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்