பொறியியல் கலந்தாய்வை ஆகஸ்ட் மாதம் தொடங்க உயர்கல்வித் துறையின் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இயங்கும் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பொறியியல் கல்லூரியில் உள்ள இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. தற்போது கரோனா ஊரடங்கால் கலந்தாய்வு தாமதமாகி உள்ளது.
இந்நிலையில், கலந்தாய்வை நடத்துவது குறித்து உயர்கல்வித் துறையின் கவுன்சில் கூட்டம் கடந்த 29-ம் தேதி அண்ணாபல்கலைக்கழகத்தில் நடந்தது. இதில், உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் இயக்குநர் விவேகானந்தன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு விண்ணப்பத் தேதியை ஜூலை 2-வது வாரத்தில் அறிவிக்க வேண்டும்.
செப்.16-ல் வகுப்புகள் தொடக்கம்
மாணவர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டு,ஆகஸ்ட் 30-க்குள் முதல் சுற்றுகலந்தாய்வையும், செப். 10-க்குள் 2-ம் சுற்று கலந்தாய்வையும் முடிக்க வேண்டும். நிரம்பாத இடங்களுக்கு செப்.15-க்குள் கலந்தாய்வு நடத்தி முடிக்கவேண்டும். செப்.16-ம் தேதி புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படவேண்டும். இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட்டில் முடிக்கவேண்டும் என்று பல்கலை. மானியக் குழு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago