கரோனா ஊரடங்கு காரணமாக 2019-20-ம் கல்வியாண்டின் இறுதியாண்டு மாணவர்களுக் கான இறுதி பருவத் தேர்வு நடத்துவது குறித்து மாற்று வழிகளை பரிந்துரைக்க ஹரியாணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.சி.குஹாத் தலைமையில் நிபுணர் குழுவை யுஜிசி அமைத்தது.
அந்த நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரையில் கூறப் பட்டுள்ளதாவது: பல்கலைக்கழக பருவத் தேர்வுகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
இறுதியாண்டு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் கடந்த பருவத் தேர்வின் செயல்திறன் அடிப்படையாக இறுதித் தேர்வுக்கான மதிப்பெண்களை கணக்கிட வேண்டும்.
முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தங்களுக்கு இறுதி மதிப்பெண்கள் வழங்கப்படுவதில் திருப்தியில்லாத மாணவர்களுக்கு நோய் பாதிப்பு குறையும் போது, தேர்வுகளை நடத்தலாம். புதிய கல்வியாண்டு தொடக்கம், கல்லூரி திறப்பு உள்ளிட்ட கல்விப் பணிகளை அக்டோபர் வரை ஒத்திவைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் முடிவு என்ன என்பது குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் கேட்டபோது, “பல்கலைக்கழக இறுதியாண்டு பருவத் தேர்வுகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். முதல்வருடன் கலந்து ஆலோசித்தும், கல்வியாளர்கள் அளிக்கும் பரிந்துரைகள் அடிப்படையிலும் விரைவில் முடிவுகள் எடுக்கப்படும்” என்றார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 hours ago
வெற்றிக் கொடி
3 hours ago
வெற்றிக் கொடி
3 hours ago
வெற்றிக் கொடி
3 hours ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
28 days ago