தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கிரேடு முறையில் மதிப்பெண்கள் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் புதிய கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்துக் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பசுமை வழிச் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. முதல்வருடனான சந்திப்புக்குப் பிறகு கல்வித்துறை அதிகாரிகளையும் அமைச்சர் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் துறை அதிகாரிகளுடன் சந்திப்பு நடைபெற்று வருகிறது.
இதில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், தொடக்கக் கல்வி, பள்ளிக் கல்வி, தேர்வு உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் முதன்மை அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர். 20-க்கும் அதிகமான அதிகாரிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், கிரேடு முறையைத் தற்போது அரசு பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago