புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 11-ம் வகுப்பு பாடப்பிரிவுகளால் மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பு பறிபோகும். எனவே அரசின் முடிவை திரும்ப பெறவேண்டும் என்று திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச் சரும், திமுக எம்எல்ஏவுமான தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கை:
தொழிற்கல்வி கனவாகும்
புதிய கல்வி ஆண்டில் 11-ம் வகுப்புக்கு மூன்று பகுதிகளாக பாடப்பிரிவுகள் உருவாக்கப் பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தாங்கள் உயர் கல்வியில் பயில விரும் பும் படிப்புக்கு, 11-ம் வகுப்பில் சேரும் போதே தேர்வு செய்து, அதற்கேற்ப கூடுதல் பாடங்களைப் படிப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்று தேன் தடவி விஷத்தை மறைத் துள்ளது கல்வித் துறை. தமிழகத்தில் மருத்துவக் கல் லூரியில் இடம் கிடைக்காத மாணவர்கள் தொழிற்கல்வியை தேர்ந்தெடுப்பார்கள். ஏற் கெனவே நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத் துவக் கனவு சிதைந்துள்ள நிலை யில், தற்போது தொழிற்கல்விக் கனவுகளிலும் மண்ணை வாரிப் போட்டுள்ளது.
மருத்துவ படிப்பில் சேர முடியாது
புதிய அறிவிப்பின்படி, பிரிவு-3 (கணிதம், இயற்பியல், கணினி அறிவியல்) மற்றும் பிரிவு 4-ல் (வேதியியல், உயிரி யல், மனையியல்) சேரும் மாணவர்கள் மருத்துவப் படிப் புக்கோ அல்லது பொறியியல் படிப்புக்கோ விண்ணப்பம் கூடச் செய்ய இயலாதபடி திட்ட மிட்டே வடிவமைக்கப்பட்டுள் ளன.
திரும்பப் பெற வேண்டும்
இதன்மூலம் தமிழகத்தின் மிகச்சிறந்த பொறியியல் கல்லூரிகளில் உள்ள முக்கிய பாடப் பிரிவுகளில் வடநாட்டைச் சார்ந்த மாணவர்களே அதிக இடம் பெறும் சூதுக்கு தமிழக அரசு பலியாகி உள்ளது.
தமிழக மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்புகளை அடி யோடு அழிக்கத் துடிக்கும் இந்த மாபெரும் துரோகத்தை திமுக வன்மையாகக் கண்டிப் பதுடன், இந்த முடிவுகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்து கிறது.
இவ்வாறு அந்த அறிக் கையில் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago