பள்ளி மாணவிகள் தயாரித்த தானியங்கி கிருமிநாசினி தெளிக்கும் கருவி: அரசு மருத்துவமனைக்கு வழங்கல்

By இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பள்ளி மாணவிகள் மூவர் இணைந்து தானியங்கி கிருமிநாசினி தெளிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் கையுறை அணிய வேண்டும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் உள்ளிட்ட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு அறிவுறுத்தி வருகிறது.

மருத்துவமனைகள் , அலுவலகங்கள் ,கடைகளில் கை கழுவுதல் பணியை ஆட்கள் இன்றி இயந்திரம் மூலம் செய்ய அருப்புக்கோட்டை தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 9-ம் வகுப்பு மாணவிகள் ரம்யா, ஐஸ்வர்ய லட்சுமி, மதுமிதா ஆகியோர் தானியங்கி கிருமிநாசினி தெளிப்பானை தயாரித்துள்ளனர்.

வீட்டில் இருந்தபடியே இதற்கான முயற்சிகளை மாணவிகள் மேற்கொண்டனர். பள்ளியில் ஆய்வகக் கருவிகளைக்கொண்டு இதைத் தயாரிக்க ஆய்வக பயிற்சியாளர் இந்துமதி வழிகாட்டுதல்தபடி கையை நீட்டினால் தானாகவே கிருமி நாசினி தெளிக்கும் வகையில் இந்த இயந்திரத்தை மாணவிகள் உருவாக்கி உள்ளனர்.

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு இந்த இயந்திரத்தை பள்ளி நிர்வாகம் திட்டமிட்டபோது, மாணவிகளின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் மருத்துவமனை நிர்வாகமும் இதற்கு அனுமதி அளித்துள்ளது.

அதையடுத்து, மாணவிகளால் தயாரிக்கப்பட்ட இந்நவீன தானியங்கி கிரிமிநாசினி தெளிப்பான் இயந்திரம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பொது சிகிச்சைப் பிரிவில் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாணவிகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள், மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து தானியங்கி இயந்திரத்தை கண்டுபிடித்த மாணவிகள் கூறுகையில், மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு கைகளை சுத்தப்படுத்த தனி நபர் ஒருவர் பணியமர்த்தப்பட வேண்டும். இச்சிரமத்தைப் போக்கும் அல்ட்ராசோனிக் சென்ஸார் மூலம் இந்தி இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்திரத்தின் முன் கைகளை காட்டினால் தானாக இயந்திரம் கிருமிநாசினியைத் தெளிக்கும். அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு பகுதியில் இதேபோன்று மேலும் ஒரு இயந்திரம் பொருத்தப்பட உள்ளதாகவும் மாணவிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

5 hours ago

வெற்றிக் கொடி

5 hours ago

வெற்றிக் கொடி

5 hours ago

வெற்றிக் கொடி

5 hours ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

28 days ago

மேலும்