ஊரடங்கில் தினந்தோறும் ரேடியோ வகுப்புகள்: காஷ்மீரில் பயனடையும் மாணவர்கள்

By பிடிஐ

கரோனா ஊரடங்கு காலத்தில் பாடத்திட்டத்தை முடிக்க, ஜம்மு காஷ்மீர் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தோடா மாவட்டத்தில் நடத்தப்பட்டு வரும் ரேடியோ வகுப்புகளால் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டம் மலைப்பகுதியில் அமைந்திருப்பதால், மோசமான வானிலை காரணமாக டிசம்பர் முதல் மார்ச் வரை மழைக்கால விடுமுறை விடப்படும். மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரை முழுவீச்சில் கற்றல்- கற்பித்தல் பணிகள் நடைபெறும். ஆனால் கரோனா பொது முடக்கம் அனைத்து நடவடிக்கைகளையும் புரட்டிப் போட்டது.

இதனால் அக்டோபர் - நவம்பர் வாக்கில் 12-ம் வகுப்பு வரை நடைபெறும் பருவத் தேர்வுக்கு முன்னதாக பாடத் திட்டங்களை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மே 29 முதல் ரேடியோ மூலம் தோடா மாவட்டத்தில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆல் இந்தியா ரேடியோவின் உள்ளூர் ஸ்டேஷன் ஏஐஆர் பாதர்வா மூலம் தினந்தோறும் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. 101 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் தினசரி காலையில் ஒன்றரை மணி நேரம் வகுப்புகள் நடைபெறுகின்றன.

தனியார் டியூஷன் அனுப்பவோ, ஸ்மார்ட் போன், இணைய இணைப்புப் பெற்று ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுப்பவோ வசதியில்லாத விளிம்புநிலைப் பெற்றோர்களின் குழந்தைகள், ரேடியோ வகுப்புகளால் பயன்பெற்று வருகின்றனர். இந்த வகுப்புகளால் சுமார் 45 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

அதே நேரத்தில் ஆன்லைன் வகுப்புகளைக் கற்கும் மாணவர்களும் இதன் வித்தியாச அனுபவம் காரணமாக ரேடியோவகுப்புகளை விரும்பிக் கேட்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

20 hours ago

வெற்றிக் கொடி

20 hours ago

வெற்றிக் கொடி

20 hours ago

வெற்றிக் கொடி

20 hours ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

28 days ago

மேலும்