கரோனா காலத்தில் இணைய வசதி இல்லாத பழங்குடி மாணவர்கள் கல்வி கற்பதற்காகச் சிறப்புத் திட்டத்தை ஒடிசா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் ஒடிசாவில் உள்ள 6 லட்சம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்கள் பயன்பெறுவர் என்று அம்மாநில எஸ்சி/ எஸ்டி வளர்ச்சி நலவாழ்வுத் துறை செயலர் ரஞ்சனா சோப்ரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறும்போது, ''இணைய வசதி உள்ள மாணவர்களுக்கு வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் இ-உள்ளடக்கங்கள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். 10-ம் வகுப்பு வரை இதற்கான உள்ளடக்கங்கள் ஏற்கெனவே தயார் நிலையில் உள்ளன. 2-ம் வகுப்பில் இருந்து இந்த நடைமுறை அமல்படுத்தப்படும்.
இணைய வசதியும் ஸ்மார்ட்போன்களும் இல்லாத மாணவர்களுக்கு வழிகாட்டி ஆசிரியர்கள் கல்வி கற்க உதவுவார்கள். தொலைதூரக் கிராமங்களிலும் நகரின் சில பகுதிகளிலும் வசிக்கும் மாணவர்களின் வீடுகளுக்கு, ஆசிரியர்களே நேரடியாகச் சென்று பயிற்றுவிப்பார்கள்.
» தொற்று குறைவான பகுதிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கு ஜூலை 1 முதல் பள்ளி: மகாராஷ்டிரா அறிவிப்பு
» மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் 50% இடஒதுக்கீடு கோரிய வழக்குகள் இன்று விசாரணை
இதற்காக மாநிலத்தில் உள்ள 21,,239 பழங்குடி கிராமங்களுக்கு 4,467 வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தொலைதூர கிராமங்களில் வசிக்கும் பழங்குடி சிறுவர்களுக்கு கற்பித்தல் நடைமுறைகளை வழங்கி, திறன்சார் பயிற்சிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளோம்'' என்று ரஞ்சனா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago